Posts

Showing posts from March, 2018

தாள் 7

தாள் 7(அ)     தமிழ் கற்பித்தல்   பகுதி1 கற்பிக்கும் முறைகள்     எழுதும் திறன்      படிப்பு ஒருவனை  ஒரு முழு மனிதனாக்குகிறது. பேச்சு அவனை மதிப்புள்ளவனாக்குகிறது. எழுத்து அவனை செம்மையாக்குகிறது.                  .     பிரான்சிஸ்பேக்கன்                   கையெழுத்துக்கான முன் பயிற்சிகள்   :     எழுதத்தொடங்குவதற்கு முன் குழந்தைகளின் கை முன்கை மணிக்கட்டு விரல்கள் தசைநார்கள்  முதலியவை விருப்பப்படி இயங்கவல்ல பயிற்சிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.                                                           எழுத்துப்பயிற்சி முறைகள்  :                                         வரியொற்றி எழுதுதல் , பார்த்து எழுதுதல்  ,சொல்வதெழுதுதல்.                      நல்லக்கையெழுத்தின் பண்புகள்   :             தெளிவு  விரைவு  அளவு                               பிழையின்றி எழுதப் பயிற்சிகள்                 பிழையின்றி எழுத ஒலித்தற்குரிய ஒலிகளில் துல்லியமான அறிவு இருத்தல் வேண்டும்.                                      உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும், எண்ணங்களுக்கும் உடல் கொடுப்பதே எழுத்து ஆகும்.

Paper 6 GENDER SCHOOL AND SOCIETY

பள்ளிப்பாடநூல்களிலும் கலைத்திட்டங்களிலும் பாலினப்பங்குப் பணிகள் பற்றிய சித்தரிப்பு                    மொழிப்பாடங்களும் வரலாற்றுப் பாடங்களும் பாலின சமத்துவமின்மையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை அதிகம் பெற்றுள்ளன. மொழிப்பாடம்       தமிழில் செய்யுள் பகுதியிலும் உரைநடை பகுதியிலும் ஆடவரது படைப்புகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.பெண்பாற் புலவர்களதுப் படைப்புகள் 20%மட்டுமே இடம் பெற்றுள்ளன. வரலாற்றுப் பாடம்       வேதகாலம் முதல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை இந்திய வரலாறு விவரிக்கப்படுகிறது. பாட நூல்களில் கூறப்பட்டுள்ள பாலின சார்புக் கருத்துக்கள் தொடக்கக்கல்வி         பாடங்களில் பட விளக்கங்களுடன் அம்மா அக்கா,  அப்பா அண்ணன் போன்றோரதுப் பணிகள் மரபு ரீதியாக சித்தரிக்கப் படுகின்றன. இடைநிலைக் கல்வி      இலக்கியப் பகுதிகளிலும் கோவலன் மற்றும் கண்ணகியின் தந்தைப் பெயர் மட்டுமே கூறப்பட்டுள்ளது. தாயின் பெயர் கூறப்படவில்லை. மேல்நிலைக் கல்வி          இல்ல மேலாண்மை,  கவின் மேலாண்மை போன்றவை பெண்களுக்குரியதாக கருதப்படுகிறது.        கிரிக்கெட்,  உயரம் தாண்டுதல் போன்றவை ஆண்பால் இனத்தவருக்கென கருதப்படுகிறது.

Paper:5

UNDERSTANDING DISCIPLINE AND SUBJECT     பள்ளிப் பாடங்களும் சமுக நீதியும்        சமூகநீதிக்கருத்துக்களை அதிகமாக மொழிப்பாடங்களிலும் சமுகஅறிவியல் பாடங்களிலும் சேர்த்திடலாம் மொழிப்பாடம்: சாதி இரண்டொழிய வேறில்லை பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் போன்ற கவிதைகள் அல்லது செய்யுள்களை இடம்பெற செய்யலாம். சமூக அறிவியல்: ஈ.வெ.ரா.பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோரது தொண்டு மற்றும் சமூக சீர்திருத்த கருத்துக்களை இடம் பெற செய்யலாம். கணிதம்: ஒரு வேலைக்கு ஒரே விதமான ஊதியம் என்கிற கருத்தையொட்டி எண்கணக்குகள்பயிற்சி தரப்பட வேண்டும். சுற்றுசூழல் அறிவியல்: சுற்றுசூழல் மாசுப்படல் அதனால் ஏற்படும் பாதிப்பை அதிகம் ஏற்பவற்கள் கிராமப்புற வாசிகளா நகற்புற வாசிகளா  போன்றக்கருத்துக்களை இடம்பெற செய்யலாம். அறிவியல்: கருத்துக்களை மாணவர்கள் கற்பதோடு அவற்றை நடைமுறையில் பயன்படுத்திடும் ஆற்றலையும் வளர்ப்பதே அறிவியல் கல்வியின் நோக்கமாகும்.             சமூக அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காண மாணவர்கள் அறிவியல் முறையை பயன்படுத்த வேண்டும்.

PAPER 4 LANGUAGE ACROSS THE CURRICULUM

பாடமொழியாகத் தமிழ்         தாய்மொழியையே பாடமொழியாகக் கொண்டு கல்வி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவம் உள்பட அனைத்துப் படிப்புகளும் தமிழிலேயே வழங்கப்பட வேண்டும். சொல்லாக்கம் : மறு பரிசீலனை ஒரு நாட்டின் அறிவியல் தொழில் நுட்பம் பெருக வேண்டுமாயின் தாய்மொழி மூலம் கற்றல் அவசியம் என்பது அறிஞர்களால் வலியுறுத்தப்படுகின்றது. தமிழைப் பொறுத்தவரையில் பாடமொழியாகவும் ஆட்சிமொழியாகவும் சட்டப் பூர்வமாக அமல் படுத்தியும், இன்றும் உயர்கல்வியில் தமிழ் என்பது சாத்தியமற்று உள்ளது. இந்நிலைக்குப் பல காரணங்கள் உள்ளன. சமூக, அரசியல் காரணங்கள் முதன்மையிடம் வகிக்கின்றன. ஆங்கிலம், ஜப்பான் போன்ற மொழிகளில் வழக்கிலிருக்கும் பல்வேறு துறைக் கலைச்சொற்களுக்கு நிகரான சொற்கள் தமிழில் பெரிய அளவில் இல்லை என்பது துறை வல்லுநர்களின் கருத்து. அதாவது தமிழில் இதுவரை செய்யப்பட்டுள்ள சொல்லாக்க முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதாகும். எனவே சொல்லாக்கத்தில் இதுவரை நடைபெற்றுள்ளவற்றை ஆழமான ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். அப்பொழுது தான் சொல்லாக்கத்தில் ஏற்பட்டுள்ள சாதனைகள், தேக்கநிலை போன்றவற்றை மதிப்பிட இயலும். மேலும் எதிர்காலத்தில் செய

Paper 3 LEARNING AND TEACHING

கல்விச் சாதனைகள்    கல்வியில் மதிப்பிடுதல் அளவிடுதல் என்பது ஒரு செயல் அல்லது ஒரு தொடர் நிகழ்வு;அளவிடுதல் மதிப்பிடுதலுக்கு ஓரெண் அளவைக் கொடுக்கிறது.ஓர் அளவின் மூலம் துல்லியமாக அறிதல் அளவிடுதல். மதிப்பிடுதல் என்பது அளவிடுதலை விட ஒரு பரந்த, அர்த்தமுள்ள,, தரமான, தொடர்ச்சியான நிகழ்வு ஆகும். மதிப்பிடுதல்-வரையறை ஜேம்ஸ் எம்.பேரட்பீல்டு என்பவர்"மதிப்பிடல் என்பது குறியீடுகளை நிகழ்வுக்கு வழங்குவதும் அதன்மூலம் ஒரு நிகழ்வின் மதிப்பை உணர்த்துவதும் ஆகும். அத்தகைய மதிப்பிடல் பொதுவாக ஒரு நிலையான தரத்தைக் கொண்டு வழங்கப்படும்" என்று வரையறுக்கிறார். கல்வியில் மதிப்பிடுதல்-நோக்கம் ஒரு முழு கல்வி என்பது சில குறிப்பிட்ட நோக்கம் மற்றும் குறிக்கோள்களைக் கொண்டது. எ.கா.பண்பாடு, சமுதாய, தொழில், மனவெழுச்சி நோக்கங்கள் கல்வி:சிறப்பியல்புகள் மதிப்பிடுதலுக்கு மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளின் விளைவுகளைக் கணக்கிடும் கருவியாகும். இது தொடர்ச்சியாக நடைபெறும். இது அறிவு, உணர்வு, செயல் சார்ந்த அடைவுகளையும் சோதிக்கிறது. மாணவனின் முழு ஆளுமை வளர்ச்சிக்கு உகந்தது. இதில் ஒரு குறிப்

Paper 2 CONTEMPORARY INDIA AND EDUCATION

Paper 2       CONTEMPORARY INDIA AND                        EDUCATION வேதகாலக் கல்வி குரு குலம்   இந்தியாவில் பன்டைய காலத்தில் கல்வி கற்றுத் தரும்  குருவின் ஆசிரமத்தில் மாணவர்கள் தங்கி, குருவிற்கு பணிவிடைகள் செய்துகொண்டே, குருவின் அருகிலே இருந்து கல்வி பயிலும் இடமாகும். குரு குலத்தில் படிக்கும் அனைத்து வர்ணங்களைச் சார்ந்த  மாணவர்கள் உயர்வு தாழ்வின்றி சமபாவனையுடன் குரு  கல்வி கற்றுத்தருவார். சீடர்கள் குருவின் ஆசிரமத்திற்கு அனைத்து தேவையான வேலைகள் செய்து கொண்டே கல்வி கற்க வேண்டும். குரு குலத்தில் கல்வி பயிலும் காலம் குறைந்தபட்ச காலம் 12 ஆண்டுகளாகும். குரு குலத்தில் கல்வி பயிலும் மாணவர்களை பிரம்மச்சாரிகள்  என்று அழைப்பர். குருகுலத்தில் கல்வி பயிலும் காலகட்டத்தில், மாணவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டும். ஆசிரமம் ஏற்படுத்திக் கொள்ளாத குரு, தனது சீடர்களுக்கு சாத்திரக்கல்வி மட்டும் கற்றுத் தருவார். சீடர்கள் குருவிற்கும் சேர்த்து உணவை பிச்சை எடுத்து குருவிற்கும் அளித்து பிறகு தான் உண்டு, சத்திரங்களில் அல்லது பொது இடங்களில் உறங்கி கல்வி பயில வேண்டும். குருகுலத்தில் கற

Paper1          CHILDHOOD AND GROWING UP பியாஜேய் அறிதிறன் வளர்ச்சி படிநிலை  கோட்பாடு

Paper1          CHILDHOOD AND GROWING UP பியாஜேய் அறிதிறன் வளர்ச்சி படிநிலை  கோட்பாடு பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைக ள் பியாஜே   அறிதிறன்   வளர்ச்சி பியாஜேயின்   அறிதிறன்   வளர்ச்சி  நிலைகள் அறிதிறன்   வளர்ச்சி அறிதிறன்   கட்டமைப்பு மூளையின் உயிரியல் முதிர்ச்சி மற்றும் தனிப்பட்டஅனுபவங்களுக்கிடையே ஏற்படும் இடைவினையின்காரணமாக அறிதிறன் வளர்ச்சி ஏற்படுவதாகசுவிட்சர்லாந்து உளவியல் அறிஞர் ஃபியாஜேகருதுகிறார். உலகச் சூழலுடன் இடைவினை ஏற்படுத்திக் கொள்ளஇவ்வறிதிறன் கட்டமைப்பு நமக்கு உதவிபுரிகின்றது. இவ்வறிதிறன் கட்டமைப்பில் உட்கிரகித்துதன்வயபடுத்தலும் இடம் கொடுத்தலும்அடங்குகின்றன. அறிதிறன்   வளர்ச்சி   நிலைகள் குழந்தையின் அறிதிறன் வளர்ச்சியில் ஃபியாஜேசில குறிப்பிடதக்க நிலைகளைக் குறிப்பிடுகிறார். v   புலன்   இயக்க   நிலை -   0 - 2  வயது:-                 0-2 வயது வரை குழந்தையின்உளவளர்ச்சியிள் முக்கிய பங்கு வகிப்பதுபுலக்காட்சிகளும், உடல் இயக்கச் செயல்பாடுகளுமேஆகும். பிறந்த குழந்தை 4 மாதம் வரை பார்த்தல்,சூப்புதல், பெறுதல் போன்ற செயல்களில்ஈடுபடுகிறது. பொருட்கள் அல்லதுநிகழ்வுகளுக்கான 

சுய விவரம்

சுயவிவரம்       பெயர்       :அனிஷா.செ அப்பா பெயர்:செல்லசுவாமி.ப அம்மாபெயர்:சசிகலா.ஜ பிறந்த தேதி:26-10-1995 முகவரி          :                                                   :அனிஷா.செ                          :த/பெ.செல்லசுவாமி.ப                          :அத்திக்குழி தெரு,                          : காப்புக்காடு அஞ்சல்                          : கன்னியாகுமரி மாவட்டம்                                பின்கோடு-629162. கல்வித்தகுதி:இளங்கலை தமிழ்: 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்                      தமிழ்            -77             ஆங்கிலம்            -67                கணிதம்            -66            அறிவியல்            -96 சமூக அறிவியல்           -88 மொத்தம்                          -394 பள்ளியின் பெயர்:புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி காப்புக்காடு. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்             தமிழ்              -174    ஆங்கிலம்              -123 இயற்பியல்              -124      வேதியல்              -108 தாவரவியல்             -154 விலங்கியல்             -1