Posts

Paper 4 தமிழ் கற்பித்தல் பகுதி 2 (பாடத்தேர்ச்சி)

வினாவின் வகைகள்:         வினா ஆறுவகைப்படும். அவை            அறிவினா, அறியாவினா, ஐயவினா ,கொளல்வினா, கொடைவினா ,ஏவல்வினா என்பன. அறிவினா:             தனக்குத் தெரிந்த ஒன்றை பிறருக்கு தெரியுமா என்று அறியும் பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா எனப்படும். (எ.கா)             திருக்குறளை இயற்றியவர் யார்?என ஆசிரியர் மாணவனிடம் வினவுவது. அறியாவினா:            தான் அறியாத ஒரு பொருளை அறிந்துக் கொள்வதற்காக ப் பிறரிடம் வினவுவது அறியாவினா. (எ.கா)             எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவையென மாணவன் ஆசிரியரிடம் வினவுவது.              ஐயவினா:                    தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒரு பொருள் குறித்து, ஐயத்தினைப் போக்கிக் கொள்வற்காக வினாவப்படும் வினா ஐயவினா. (எ.கா)            அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ? கொளல்வினா:                    தான் ஒரு பொருளை வாங்கிக்கொள்ளும் பொருட்டுக் கடைக்காரரிடம் வினவும் வினா கொளல்வினா. (எ.கா)             பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா. கொடைவினா:                  தான் ஒருப் பொருளைக் கொடுப்பதற்காக அப்பொருள் இருத்தலைப் பற்றிப் பிறரிட

Paper 5 Yoha Health and Physical Education

உடல்நலக் கல்வியயின் முக்கியத்துவம்:                     "ஆன்மாவானது உறுதியற்ற மனிதனை சென்றடையாது"                             -சுவாமி விவேகானந்தா            "உடல் நலமே ஒருவனின் முதல் செல்வமாகும்"                             - எமர்சென்               உடல்நலம் விலை மதிக்க முடியாத சொத்தாகக் கருதுவதால் உடல்நலம் பற்றிய கல்வியறிவு உறுதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.               உடல் உறுப்புகளின் செயல்பாடுகள், உடல்நலம், சுகாதாரம், தொற்றுநோய்கள், தடுக்கும் முறைகள் பற்றிய தகவல்களை அறிய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படுகிறது.                உடல் குறைபாடுகளையும் குழந்தைகளின் இயல்புக்கு மாறான வளர்ச்சிகளைக் கண்டறியவும் உடல் நலக்கல்வி உதவுகின்றது.                நல்ல பழக்க வழக்கங்களைப்  பற்றிய விழிப்புணர்வு கிடைக்கின்றது.                பள்ளி, வீடு ,சமுதாயத்தில் மனித நேயத்துடன் வாழ வழி வகுக்குகின்றது.                நோய்களை தடுப்பதற்கும் கட்டுடுத்துவதற்குரிய விழிப்புணர்வு அளிக்கின்றது.                  முதலுதவியைப் பற்றிய அவசியத்தை உணர்த்துகின்றது.

Paper 3 creating an inclusive school

இயலா நிலைக் குறித்த மருத்துவப் படிமம்:              ஒருவரது இயலாநிலை என்பது அவரது உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த பிரச்சனைகளால் விளைவதேயன்றி அவரது புறச்சூழல் மற்றும் சமூக சூழலோடு தொடர்புடையது அன்று என்பது மருத்துவப் படிமத்தின் கருத்தாகும்.                 மருத்துவப் படிமத்தை முன்னிலைப் படுத்துவோர் ஒருவரது இயலாநிலை என்பது அவரது மருத்துவ நிலையின் காரணமாக ஏற்படுகிறது.அதாவது உடலுறுப்புகள் சரிவர இயங்காததன் விளைவாய் தோன்றுகிறது என்று கூறுகின்றனர். எ.கா:           கால்கள் சரிவர இயங்காத நிலையில் அவர் தனது வீடு, போக்குவரத்து சாதனங்கள், பணியிடங்கள்,கேளிக்கை அரங்குகள் போன்றவற்றிற்கு எளிதாக செல்ல முடியாமல் போகிறது. இயலா நிலைக் குறித்த மருத்துவப் படிமத்தின் அம்சங்கள்:             ஊனமுற்றோரது பொருளாதாரம், வறுமை ,சூழ்நிலை ஆகியவை அவரது வேலவாய்ப்பை பெரிதும் பாதிக்கிறது.அவரை குணப்படுத்தி ஊனத்தின் அளவை குறித்து தொழிலாளர் சந்தையில் ஒரு வேவலையைப் பெறச் செய்து உதவிட வேண்டும்.                இவர்களுக்கு இலவசமாக கருவிகளையும், உபகரணங்களையும் அரசாங்கம் அளித்து உதவிட வேண்டும். இயலா நிலைக் குறித்த மருத்த

Paper 2 Assesment for learning

ஆழ்சிந்தனைக் குறிப்பேடு மற்றும் ஆழ்சிந்தனைக்  குறிப்பேட்டின் நிறைகள்:          மாணவர் தனது வகுப்பறை  கற்றல் செயல்பாட்டின் போது கற்றறிந்தப்படி பாடக் கருத்துக்களையும்     அவை பற்றிய தனது சொந்த அனுபவங்களையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து உணர்ந்து அறிந்தவற்றையும் அன்றாடம் தேதி வாரியாக பதிவு செய்திடுவதற்கான வழிமுறையே ஆழ்சிந்தனைக் குறிப்பேடு என்று அறியப்படுகிறது. நிறைகள்:                              துடிப்புடன் விளங்கும் கற்றல்:              வகுப்பில் கற்றவை குறித்து மாணவர்கள் ஆழ்ந்து சிந்தித்து அவர்கள் தமது கற்றலை மேம்படுத்துவதில் சுய முனைப்புடன் இயங்கிட செய்கிறது.கருத்துகளை பல்வேறு கோணங்களில் அலசி ஆராயத் தூண்டுகிறது. மாணவர்களதுக் கற்றலில் ஏற்படும் முன்னேற்றத்தை அறிந்திடல்:                ஆழ்சிந்தனைக் குறிப்பேட்டை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பார்வையிட்டு மதிப்பிடுதல் மூலம் மாணவர்களது கற்றல் முன்னேற்றம் குறித்து ஆசிரியர் அறிவதோடு அவர்களது  உணர்வுகளையும் , சிந்தனைகளையும் அவரால் புரிந்துக் கொள்ள முடிகிறது. மாணவர்களது எழுதும் திறன் மேம்படுதல்:                   ஆழ்சிந்தனைக்  க

Paper 1 knowedge and curriculum

       மாணவர் மைய கல்வி குறித்த காந்தியடிகளின் கருத்து  : “மாணவன், தான் வசிக்கும் சூழலை விட்டு விலகித் தனித்து போகாத கல்வி; உடலுழைப்புடன் கூடிய கல்வி; புத்தகச் சுமையற்ற கல்வி, குழுவாய் இணைந்து கற்கும் கல்வி¢; செயல்பாடுகள் நிறைந்த கல்வி; கைத்தொழில்கள் பயிற்றுவிக்கும் கல்வி; மாணவர்களின் பன்முகத் திறன்களுக்கு வாய்ப்பளிக்கும் கல்வி’’ என்பதாக கல்வி குறித்து காந்தி தெரிவித்த நடைமுறைப்படுத்திய கருத்துகளில் “உண்மையும் முற்போக்குத் தன்மையும் மிளிர்வதை இன்றைய கல்விச் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள்; ஒப்புக்கொள்கிறார்கள்’’ ஒரு குழந்தை பள்ளியில் பெறுகிற கல்விக்கும், வீட்டுச் சூழ்நிலைக்கும் இணக்கமான தொடர்பு இருக்க வேண்டும் கல்வி இலவசமானதாகவே இருக்க வேண்டும். ஆரம்பம் முதலே தாய்மொழியில் கல்வி போதிக்கப்பட்டிருந்தால், இப்போது ஆங்கிலம் அறிந்த சிலருக்கு மட்டுமே தெரிந்திருப்பவை, கோடிக்கணக்கான நம் மக்களுக்கும் எட்டியிருக்கும்.       செயல்வழிக் கற்றல் "மகாத்மா காந்தியின் ஆதாரக் கல்வியிலும் செயல் வழிக் கற்றலே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு கருத்தை கேட்பதன் மூலமாகவோ அரிவதைவிட செய்து கற்கும

தாள் 7

தாள் 7(அ)     தமிழ் கற்பித்தல்   பகுதி1 கற்பிக்கும் முறைகள்     எழுதும் திறன்      படிப்பு ஒருவனை  ஒரு முழு மனிதனாக்குகிறது. பேச்சு அவனை மதிப்புள்ளவனாக்குகிறது. எழுத்து அவனை செம்மையாக்குகிறது.                  .     பிரான்சிஸ்பேக்கன்                   கையெழுத்துக்கான முன் பயிற்சிகள்   :     எழுதத்தொடங்குவதற்கு முன் குழந்தைகளின் கை முன்கை மணிக்கட்டு விரல்கள் தசைநார்கள்  முதலியவை விருப்பப்படி இயங்கவல்ல பயிற்சிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.                                                           எழுத்துப்பயிற்சி முறைகள்  :                                         வரியொற்றி எழுதுதல் , பார்த்து எழுதுதல்  ,சொல்வதெழுதுதல்.                      நல்லக்கையெழுத்தின் பண்புகள்   :             தெளிவு  விரைவு  அளவு                               பிழையின்றி எழுதப் பயிற்சிகள்                 பிழையின்றி எழுத ஒலித்தற்குரிய ஒலிகளில் துல்லியமான அறிவு இருத்தல் வேண்டும்.                                      உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும், எண்ணங்களுக்கும் உடல் கொடுப்பதே எழுத்து ஆகும்.

Paper 6 GENDER SCHOOL AND SOCIETY

பள்ளிப்பாடநூல்களிலும் கலைத்திட்டங்களிலும் பாலினப்பங்குப் பணிகள் பற்றிய சித்தரிப்பு                    மொழிப்பாடங்களும் வரலாற்றுப் பாடங்களும் பாலின சமத்துவமின்மையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை அதிகம் பெற்றுள்ளன. மொழிப்பாடம்       தமிழில் செய்யுள் பகுதியிலும் உரைநடை பகுதியிலும் ஆடவரது படைப்புகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.பெண்பாற் புலவர்களதுப் படைப்புகள் 20%மட்டுமே இடம் பெற்றுள்ளன. வரலாற்றுப் பாடம்       வேதகாலம் முதல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை இந்திய வரலாறு விவரிக்கப்படுகிறது. பாட நூல்களில் கூறப்பட்டுள்ள பாலின சார்புக் கருத்துக்கள் தொடக்கக்கல்வி         பாடங்களில் பட விளக்கங்களுடன் அம்மா அக்கா,  அப்பா அண்ணன் போன்றோரதுப் பணிகள் மரபு ரீதியாக சித்தரிக்கப் படுகின்றன. இடைநிலைக் கல்வி      இலக்கியப் பகுதிகளிலும் கோவலன் மற்றும் கண்ணகியின் தந்தைப் பெயர் மட்டுமே கூறப்பட்டுள்ளது. தாயின் பெயர் கூறப்படவில்லை. மேல்நிலைக் கல்வி          இல்ல மேலாண்மை,  கவின் மேலாண்மை போன்றவை பெண்களுக்குரியதாக கருதப்படுகிறது.        கிரிக்கெட்,  உயரம் தாண்டுதல் போன்றவை ஆண்பால் இனத்தவருக்கென கருதப்படுகிறது.