Paper 4 தமிழ் கற்பித்தல் பகுதி 2 (பாடத்தேர்ச்சி)

வினாவின் வகைகள்:
        வினா ஆறுவகைப்படும்.
அவை
           அறிவினா, அறியாவினா, ஐயவினா ,கொளல்வினா, கொடைவினா ,ஏவல்வினா என்பன.

அறிவினா:
            தனக்குத் தெரிந்த ஒன்றை பிறருக்கு தெரியுமா என்று அறியும் பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா எனப்படும்.
(எ.கா)
            திருக்குறளை இயற்றியவர் யார்?என ஆசிரியர் மாணவனிடம் வினவுவது.

அறியாவினா:
           தான் அறியாத ஒரு பொருளை அறிந்துக் கொள்வதற்காக ப் பிறரிடம் வினவுவது அறியாவினா.
(எ.கா)
            எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவையென மாணவன் ஆசிரியரிடம் வினவுவது.
            
ஐயவினா:
                   தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒரு பொருள் குறித்து, ஐயத்தினைப் போக்கிக் கொள்வற்காக வினாவப்படும்
வினா ஐயவினா.
(எ.கா)
           அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?

கொளல்வினா:
                   தான் ஒரு பொருளை வாங்கிக்கொள்ளும் பொருட்டுக் கடைக்காரரிடம் வினவும் வினா கொளல்வினா.
(எ.கா)
            பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா.

கொடைவினா:
                 தான் ஒருப் பொருளைக் கொடுப்பதற்காக அப்பொருள் இருத்தலைப் பற்றிப் பிறரிடம் வினவுவது, கொடைவினா.
(எ.கா)
           மாணவர்களே !உங்களுக்குச் சீருடை  இல்லையா?

ஏவல்வினா:
                   ஒரு தொழிலைச் செய்யும்படி
ஏவும் வினா ஏவல்வினா.
(எ.கா)
            முருகா  சாப்பிட்டாயா?

Comments

Popular posts from this blog

Paper1          CHILDHOOD AND GROWING UP பியாஜேய் அறிதிறன் வளர்ச்சி படிநிலை  கோட்பாடு

Paper 2 Assesment for learning

Paper 3 creating an inclusive school