Paper 2 Assesment for learning

ஆழ்சிந்தனைக் குறிப்பேடு மற்றும் ஆழ்சிந்தனைக்  குறிப்பேட்டின் நிறைகள்:
         மாணவர் தனது வகுப்பறை  கற்றல் செயல்பாட்டின் போது கற்றறிந்தப்படி பாடக் கருத்துக்களையும்    
அவை பற்றிய தனது சொந்த அனுபவங்களையும் ஆழ்ந்து சிந்தித்துப்
பார்த்து உணர்ந்து அறிந்தவற்றையும் அன்றாடம் தேதி வாரியாக பதிவு செய்திடுவதற்கான வழிமுறையே
ஆழ்சிந்தனைக் குறிப்பேடு என்று அறியப்படுகிறது.

நிறைகள்:
                            
துடிப்புடன் விளங்கும் கற்றல்:
             வகுப்பில் கற்றவை குறித்து மாணவர்கள் ஆழ்ந்து சிந்தித்து அவர்கள் தமது கற்றலை மேம்படுத்துவதில் சுய முனைப்புடன் இயங்கிட செய்கிறது.கருத்துகளை பல்வேறு கோணங்களில் அலசி ஆராயத் தூண்டுகிறது.

மாணவர்களதுக் கற்றலில் ஏற்படும் முன்னேற்றத்தை அறிந்திடல்:
               ஆழ்சிந்தனைக் குறிப்பேட்டை
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பார்வையிட்டு மதிப்பிடுதல் மூலம் மாணவர்களது கற்றல் முன்னேற்றம் குறித்து ஆசிரியர் அறிவதோடு அவர்களது  உணர்வுகளையும் ,
சிந்தனைகளையும் அவரால் புரிந்துக் கொள்ள முடிகிறது.

மாணவர்களது எழுதும் திறன் மேம்படுதல்:
                  ஆழ்சிந்தனைக்  குறிப்பேட்டை
தயாரித்தல் மாணவர்களின் கோர்வையாக எழுதும் திறனை மேம்படுத்துவதோடு அவர்களது எழுதும் திறனை  ஆசிரியர் மதிப்பிடவும் உதவுகிறது.

மாணவர்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட வாய்ப்பு கிட்டுதல்:
     மாணவர்கள் வகுப்பறை கற்றல்-கற்பித்தல் நிகழ்ந்த விதம் குறித்து தமதுக் கருத்துக்களை வெளியிடவும், மென்மையான விமர்சனங்கள் செய்யவும் வாய்ப்பு கிடைக்கிறது.
                

Comments

Popular posts from this blog

Paper1          CHILDHOOD AND GROWING UP பியாஜேய் அறிதிறன் வளர்ச்சி படிநிலை  கோட்பாடு

Paper 3 creating an inclusive school