Paper 3 creating an inclusive school

இயலா நிலைக் குறித்த மருத்துவப் படிமம்:
             ஒருவரது இயலாநிலை என்பது அவரது உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த பிரச்சனைகளால் விளைவதேயன்றி அவரது புறச்சூழல் மற்றும் சமூக சூழலோடு தொடர்புடையது அன்று என்பது மருத்துவப் படிமத்தின் கருத்தாகும்.
                மருத்துவப் படிமத்தை முன்னிலைப் படுத்துவோர் ஒருவரது இயலாநிலை என்பது அவரது மருத்துவ நிலையின் காரணமாக ஏற்படுகிறது.அதாவது உடலுறுப்புகள் சரிவர இயங்காததன் விளைவாய் தோன்றுகிறது என்று கூறுகின்றனர்.
எ.கா:
          கால்கள் சரிவர இயங்காத நிலையில் அவர் தனது வீடு, போக்குவரத்து சாதனங்கள், பணியிடங்கள்,கேளிக்கை அரங்குகள் போன்றவற்றிற்கு எளிதாக செல்ல முடியாமல் போகிறது.

இயலா நிலைக் குறித்த மருத்துவப் படிமத்தின் அம்சங்கள்:
            ஊனமுற்றோரது பொருளாதாரம், வறுமை ,சூழ்நிலை ஆகியவை அவரது வேலவாய்ப்பை பெரிதும் பாதிக்கிறது.அவரை குணப்படுத்தி ஊனத்தின் அளவை குறித்து தொழிலாளர் சந்தையில் ஒரு வேவலையைப் பெறச் செய்து உதவிட வேண்டும்.
               இவர்களுக்கு இலவசமாக கருவிகளையும், உபகரணங்களையும் அரசாங்கம் அளித்து உதவிட வேண்டும்.

இயலா நிலைக் குறித்த மருத்துவப் படிமத்தின் குறைபாடுகள்:
                 ஊனமுற்றோர் இயல்பு நிலையிலிருந்து விலக்கமடைந்தவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம் எனவே இப்படிமம் ஊனமுற்றோரின் வாழ்வாதாரத்தை பாதிப்பபதாக உள்ளது.
                ஊனமுற்றோரின் குறைபாடுகளைப் பபோக்குவதில் சமூகத்திற்கும் ,அரசிற்கும் உள்ள பொறுப்பை இப்படிமம் கூறுவதில்லை.

Comments

Popular posts from this blog

Paper1          CHILDHOOD AND GROWING UP பியாஜேய் அறிதிறன் வளர்ச்சி படிநிலை  கோட்பாடு

Paper 2 Assesment for learning