Paper 1 knowedge and curriculum

       மாணவர் மைய கல்வி குறித்த காந்தியடிகளின் கருத்து  :

“மாணவன், தான் வசிக்கும் சூழலை விட்டு விலகித் தனித்து போகாத கல்வி; உடலுழைப்புடன் கூடிய கல்வி; புத்தகச் சுமையற்ற கல்வி, குழுவாய் இணைந்து கற்கும் கல்வி¢; செயல்பாடுகள் நிறைந்த கல்வி; கைத்தொழில்கள் பயிற்றுவிக்கும் கல்வி; மாணவர்களின் பன்முகத் திறன்களுக்கு வாய்ப்பளிக்கும் கல்வி’’ என்பதாக கல்வி குறித்து காந்தி தெரிவித்த நடைமுறைப்படுத்திய கருத்துகளில் “உண்மையும் முற்போக்குத் தன்மையும் மிளிர்வதை இன்றைய கல்விச் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள்; ஒப்புக்கொள்கிறார்கள்’’

ஒரு குழந்தை பள்ளியில் பெறுகிற கல்விக்கும், வீட்டுச் சூழ்நிலைக்கும் இணக்கமான தொடர்பு இருக்க வேண்டும் கல்வி இலவசமானதாகவே இருக்க வேண்டும். ஆரம்பம் முதலே தாய்மொழியில் கல்வி போதிக்கப்பட்டிருந்தால், இப்போது ஆங்கிலம் அறிந்த சிலருக்கு மட்டுமே தெரிந்திருப்பவை, கோடிக்கணக்கான நம் மக்களுக்கும் எட்டியிருக்கும்.

      செயல்வழிக் கற்றல்

"மகாத்மா காந்தியின் ஆதாரக் கல்வியிலும் செயல் வழிக் கற்றலே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு கருத்தை கேட்பதன் மூலமாகவோ அரிவதைவிட செய்து கற்கும் போது கிடைக்கும் அனுபவம் உண்மையானதாக இருக்கும். புரிதலோடு படிக்கும் சூழல் உருவாகும். தானே கற்றல், சக மாணவர் உதவியுடன் கற்றல், குழுவாக கற்றல் மற்றும் ஆசிரியர் உதவியுடல் கற்றல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான் செயல் வழிக் கற்றல்."

Comments

Popular posts from this blog

Paper1          CHILDHOOD AND GROWING UP பியாஜேய் அறிதிறன் வளர்ச்சி படிநிலை  கோட்பாடு

Paper 2 Assesment for learning

Paper 3 creating an inclusive school